சீர் தூக்கி காட்டும்

வினை விதைப்பவன் வினை அறுப்பான்
விதை விதைத்தவன் விரயம் காணான்
நன்மை செய்பவன் நல்வழி வகுத்தான்
நெறி தவறியவன் நீர்க்குமிழி போல் மறை ந்தான் .

வாடிய பயிர் விசனம் கொண்டு வந்தது
வதங்கிய பழம் வீணாகிப் போனது
வறண்ட நிலம் உதவாக் கறை யாகி நின்றது
வக்கிர மனத்தான் வாழ வெட்டியாகி கரைந்தான்

பட்ட மரம் துளிர்ததுக் காணேன் எவ்விதத்திலும்
கெட்ட மனம் சிறந்ததாக அறியேன் எப்போதும்
நல்ல எண்ணமும் நன் நடத்தையும் வெல்லும் எந்நாளும்
பாசமும் நேசமும் அனுசரணையும் சீர் தூக்கி காட்டும் மனிதனை

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (9-Dec-13, 8:32 am)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : seer THOOKI kaattum
பார்வை : 586

மேலே