அதிகாலைப் பனியில்
பனியும் பெய்யுது குளிரும் நடுக்குது
கூதல் அடிக்குது வாடை வாட்டுது...!
தண்ணீரில் கைவைத்தால் சில்லென இருக்குது !
தரையில் கால்பட்டால் ஜிவ்வென இழுக்குது !
உடம்பும் வேலைசெய்ய ஒத்துழைக்க மறுக்குது!
உள்ளமோ இழுத்துமூடி படுக்கச் சொல்லுது !
மூடுபனி புகைபோலும் விழிமுன்னே விரியுது !
முன்செல்வோர் முகம்கூட நிழல்போலே தெரியுது !
மூக்கடைப்பு வந்ததாலே சுவாசம் சிரமப்படுத்துது !
மூட்டுவலியும் சேர்ந்ததாலே வலிஆளைக் கொல்லுது !

