சொல்லாக் காதல்

பூவே! பூவே! எங்கே போனாய்
மணங்கள் என் நெஞ்சில்
வீசிப் போனாய் ...

அழகே! அழகே! எங்கே போனாய்
தேடல்கள் என் நெஞ்சில்
விட்டுப் போனாய் ...

கண்ணுக்குள் உன்னை வைத்து
காலங்கள் தாண்டிச் செல்வேன்,
கனவினில் உன்னை வைத்து
நினைவோடு நீந்திச் செல்வேன்,
மலரோடு உன்னை வைத்து
மணங்கள் நுகர்ந்து செல்வேன்.

பூவே! பூவே! எங்கே போனாய்
மணங்கள் என் நெஞ்சில்
வீசிப் போனாய் ...

அழகே! அழகே! எங்கே போனாய்
தேடல்கள் என் நெஞ்சில்
விட்டுப் போனாய் ...

மனதோடு உன்னை வைத்து
நாள்தோறும் மகிழ்ந்தே செல்வேன்,
கற்பனையில் உன்னை வைத்து
காதல்மொழி பேசிச் செல்வேன்,
என்னுள் உன்னை வைத்து
மண்ணோடு மறைந்தே செல்வேன்.

பூவே! பூவே! எங்கே போனாய்
மணங்கள் என் நெஞ்சில்
வீசிப் போனாய் ...

அழகே! அழகே! எங்கே போனாய்
தேடல்கள் என் நெஞ்சில்
விட்டுப் போனாய் ...

- சு.சுடலைமணி

எழுதியவர் : சு.சுடலைமணி (9-Dec-13, 4:32 pm)
பார்வை : 128

மேலே