கரையானுக்கு தீனி
கவிஞன்,
ஒவ்வொரு கவிதையிலும்,
தன் காதலை தான்,
வெளி கொணர்கிறான்,
ஏற்காத காதலாய்,
போகும் போது,
அடுத்த காதலுக்கு,
தாவும் மன பக்குவம்,
அவனுக்கு மிக,
அவசியம்,
பிடிக்காத கவிதை என்று,
உலகில் எதுவும் இல்லை,
சொல்ல நினைத்த,
கருத்தை,
சொன்னோமா,
அதில் கவனம் வேண்டும்,
கருத்து எல்லோருக்கும்,
பிடிக்குமா,
அது அவசியம் இல்லை,
ரசிகன் இல்லாத போது,
நாமே நமக்கு,
ரசிகன் ஆக வேண்டும்,
கவிதைக்கு கரையான் கூட,
ரசிகன் தான்,
நட்பு வட்டம்,
கூட,
சில நேரம்,
நம்மை மறக்கும்,
ஆனால்,
என்றும்,
கவிதை எழுதுவதை,
நாம்,
மறக்க கூடாது,
எத்தனை கவிதை,
எழுதினாலும்,
எல்லா கவிதையும்,
அருமை என்ற,
எண்ணம் முதலில்,
நமக்கு வேண்டும்,
நம் கவிதை,
எல்லோரும்,
பார்க்க வில்லை,
அதனால் தான்,
ரசிக்க வில்லை,
என்ற,
எண்ணம் தான்,
நம்மை காப்பாற்றும்,
கவிதை யாரும்,
படிக்க வில்லை,
என்றாலும்,
கரையானுக்கு,
தீனி கண்டிப்பாய் உண்டு.