நெளிகின்ற அவமானம்
புழுவாய் நெளிகின்றான்
புழுக்களை அல்லுகின்றான்...கண்டதை
சுவையோடு உண்டு வெளியானதை
கப்பிக்கண்ணீரால் கழுவி
எடுக்கின்றான்...சொட்டைத்தலை மொட்டை
வெயில்...நெடுநெடுவென...வழுவழுவென...
குளுகுளுவென...சாக்கடைச் சேற்றில் நெளிகின்றான் நுழைகின்றான்...நிறம் மாறடைகிறான்...விளிக்கின்றான்...குளிக்கின்றான்...
இவனுன்டத்தை அகற்ற துணிகின்றான்
அவமானமோ அவமானம்...அபச்சாரம்...
அபச்சாரம்...அவாள் சொல்கிறார்...
வாய்மூடி அகற்றும் அவனுக்கா?
மூக்கைப்பொத்தி வேடிக்கை பார்க்கும்
நானும் அடங்கும் இனத்துக்கா?