ஒரு துளி ஆனந்தம் 5

நன்றி உணர்தல் ஒரு ஆனந்தம்.
------------------------------------------------

1. நன்றன்று நன்றிமறப்பது

2. உய்வில்லையாம்...செய்நன்றி கொன்றவர்கு.
( (வள்ளுவம் )

3. மிகுந்த ஒழுக்க சீலர்களில் பலர் ,
வாழ்வில் தோல்வி கொள்வது ,
(அல்லது) மேன்மையுறாதது
ஏனென்று ஆய்ந்ததில் ,
ஏதாவது ஒரு வகையில்
நன்றி உணர்தலில் அவர்கள்
பின்வாங்கி இருப்பதை
அறியமுடிந்தது.

4. "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை "
ஆனாலும்
செய்நன்றி உணர்தலில் தான்
அந்த மேன்மை முழுமை அடையும்.

5. நன்றி மறந்தவர்களாக ,
செயல் படும்போது ,
வெளிப்படும் எண்ணங்கள்,
உணர்வுகள் அனைத்துமே
எதிர்மறையானவை.

6. எதிர்மறை எண்ணங்கள் ,
செயல்கள் யாவுமே ,
நல்லன அனைத்தையும்
விலக்கி வைத்து விடும்.


7 அன்றன்றே நன்றி உணர்தலில் ,
என்றென்றும் தோழமை நிலவும்.
ஆனந்தம் பயக்கும்.

*****************************************************

எழுதியவர் : மின்கவி (9-Dec-13, 9:27 pm)
பார்வை : 139

மேலே