எலாஸ்டிக் வயசு-------காதலில் ரிலாக்ஸ் மனசு

மனசிலே அவளை வைத்தேன்
மலர்ந்ததே ரோஜாப் பூக்கள்......!
குத்தட்டும் முட்கள் என்றே
குதூகலமாய் என்னைத் தைத்தேன்...!
வலிகளில் சத்தங்களும் காதலில்
வாய் திறவாமல் சிரித்தபடி இருக்கும்...!
மச மசவென்றே தென்றல் மூச்சு முட்டும்
மற்ற கதையை எங்கள் மவுனம் பேசும்...
ரகசியமாய் சிந்தைக்குள்ளே காதல்
ரம்யமாக படரும் நோய்தான்....!
வள்ளுவரே புரிந்து கொண்டேன் என்
வரிகளில் சொல்ல முடியா இன்பத்துப் பால்....!
வசந்தமும் வாடித் துளிர்ப்பதாய்.....மீண்டும்
வார்த்தைகள் வரிகளாகிறதே.....
காமனே சொல்வாயோ காதல் கவிதைக்கு
கமாதான் முற்றுப் புள்ளியோ ?!