சாதி அதுவொரு சதி----அஹமது அலி----

சாதியின் முகம்
சாத்தானின் முகம்
சகுனியின் முகம்!
((*))
சாதியெனும் விதையை
புதைப்பதற்காக
தோண்டப்படும் குழிகளிலேயே
மனித நேயங்களும்
புதைக்கப்படுகின்றன!
((*))
நஞ்சை விதைத்து
அமுதக் கனி பறிக்க
அழைப்பவர்களின் நாவுகளே
உன் சகோதரனின்
உயிர் பறிக்கும்
எமனின் இருப்பிடம்!
((*))
எமன் உன் பக்கமும்
திசை திரும்பலாம்
ஏமாளியாய் நீ
இருக்கும் பட்சத்தில்!
((*))
மேலோரென்றும்
கீழோரென்றும்
மனிதரில்லை-அவரவர்
மனங்களில்!
((*))
வருணாசிரமத்தை அர்ச்சிப்பவன்
சமதர்மத்தின் சாபக்கேடு
ஆண்டவன் படைப்பில்
அனைவரும் சமமே!
((*))
வருணாசிரமம் அர்ச்சிப்பவனின்
கர்ஜனைகளில் கேட்பதோ
மனித குலத்திற்கு
ஊதப்படும் எக்காளம்!
((*))
மனிதத் தீட்டுகள்
மாநிலத்தில் வந்ததெப்படி?
தீட்டுகள் எல்லாம்
திட்டமிடல்கள்!
((*))
சக மனிதனை
ஏற்றுத் தழுவா கைகள்
மனிதனின் கைகளல்ல
மாறாக சாத்தானின் கரங்களே!
((*))
சாத்தானை பாராட்டியாவது
சாமானியனே கை கொடுத்துப் பார்
உன்னை தொட மறுக்கும்
சாத்தானின் சகுனித்தனம்
சாணியடிக்கும் உன் முகத்தில்!
((*))
ஏவலுக்கு மட்டும் நீ
ஏக போகத்துக்கும் அவன்
வன்முறைக்கு நீ
வளம் கொழிப்பது அவன்!
((*))
ஒற்றுமை ஒவ்வா
நரிக் கூட்டமே அவர்கள்
வேற்றுமையில்
வேர் பலா சுவப்பதும் அவர்கள்!
((*))
சாதியக் கொடியை
தூக்கிப் பிடிப்பவனின்
காலுக்கடியில்
தேசியக் கொடியின்
முணங்கல்கள்!
((*))
சாதி அது ஒரு சதி
சாதி அதை விட்டும் சாதி
சாதி அதைக் காலால் மிதி
மோதி அதை தகர்த்தெறி!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (12-Dec-13, 7:39 am)
பார்வை : 310

சிறந்த கவிதைகள்

மேலே