IAS IPS விட நமக்கு தான் அதிகாரம் அதிகம் , குடியரசு தினமே அதற்குத்தான் என நாம் உணர வேண்டும்

IAS IPS விட நமக்கு தான் அதிகாரம் அதிகம் ஏனென்றால் நம் நாட்டு அரசியலமைப்பு அவ்வளவு அதிகாரத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தந்திருக்கிறது. நாட்டின் மாண்புமிகு முதற் குடிமகன் குடியரசு தலைவரிலிருந்து கடைகோடி குடிமகன் வரை வரையறுக்கப்பட்ட மற்றும் எல்லையில்லா அதிகாரம் உள்ளது. அவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நாளை தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். நாட்டின் உயர்பொறுப்பில் இருப்பவர் யாராகினும் மக்களுக்கு பயந்தும், அவர்களுக்கு பதில் கூறக்கூடிய வரையறுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் தான் இயங்க வேண்டும்..ஆனால் சாதாரண குடிமகனுக்கு அப்படி கிடையாது சட்டப்படி,நியாயப்படி உரிமையை கேட்கவும், நியாயம் கிடைக்க வில்லை என்றால் அனுமதியுடன் உண்ணாவிரதம்,போராட்டம் செய்ய அரசியலமைப்பு அளவில்லா அதிகாரத்தை வழங்கியுள்ளது அதனால் தான் நாம் நம் நாட்டை ஜனநாயக நாடு என கூறவும் காரணமாக இருக்கிறது.

எழுதியவர் : டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன (12-Dec-13, 12:23 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 80

மேலே