விழிகளில் ஈரமாக நான் இதழ்களில் புன்னகையுடன் நீ 555

உயிரே...

மலர்ந்த மலரை போல
நானிருந்தேன்...

நீயோ பல
வண்ணம் கொண்ட...

வண்ணத்து
பூச்சியாய் வந்தாயடி...

அவ்வபோது
என்னை சுற்றியே...

நீ தான் என்
வாழ்கை என்று...

மலர்ந்த மலராக என்
இதயத்தை திறந்து வைத்தேன்...

கொத்திவிட்டு
சென்றாயடி...

என் இதயத்தின் வலி...

என் விழியோரம்
கண்ணீராக கசியுதடி பெண்ணே...

வண்ணத்து பூச்சியாய்
வந்த உன்னிடம்...

உன் எண்ணம் அறியாமலே
திறந்து வைத்தேன்...

என் இதயத்தை...

நேசித்த பாசத்திற்கு
நீ தந்தாயடி சமர்ப்பணம் எனக்கு...

அவமானங்களுடன்...

என் இதயதில்காயங்கள்
பல போதுமடி கண்ணே...

இனியும் வேண்டாம்...

என்னை சுற்றாதே வலி
தாங்க முடியவில்லையடி...

விழிகளில்
ஈரமுடன் நான்...

இதழ்களில்
புன்னகையுடன் நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (12-Dec-13, 4:33 pm)
பார்வை : 327

மேலே