பூ
முழம் தொடுத்து
உளம் செல்லும்
மல்லிகையே..!
வேனல் கண்டு
வெட்கம் கொள்ளும்
தாமரையே...!
நிலவொளியில்
இதழ் விரியும்
அல்லியே...!
மையல்
மஞ்சள்
செவ்வந்தியே...!
வாசத்தால்
தன் வசமிழுக்கும்
தாழம் பூவே...!
மனம் கவரும்
பூக்களே
உங்களால்
தரணியெல்லாம்
தினமும்
மணநாட்களே...!