என் முத்தே என் சொத்தே
" என் முத்தே!! என் சொத்தே!! "
~@~@~@~@~@~@~@~@~@~@~
வட்டத்துள் விட்டமாயிடினும்
எந்தலைவன் பாரதியின்
சொல்லே மருந்து!
~@~@~@~@~@~@~@~@~@~@~
குடல்சுருங்கி பசிவாட்டிடினும்
எந்தந்தை வள்ளுவனின்
கொள்கைகளே விருந்து!
~@~@~@~@~@~@~@~@~@~@~
கொடியவர்முன் இருந்திடினும்
எந்தாய் அவ்வையின்
வாக்கே ஓங்கும் சிறந்து!
~@~@~@~@~@~@~@~@~@~@~
கண்ணைக்கட்டி நிறுத்திடினும்
என்மாமன் கம்பரின்
தையலே எனது சொத்து!
~@~@~@~@~@~@~@~@~@~@~