சமுதாயம் எங்கே செல்கிறது
சற்று முன் கண்ட நிகழ்வு
மனக் கண்ணை விட்டு அகல மறக்க
கண் முன்னே நடந்த நிகழ்ச்சி
பொய் என்று சொல்வதை கேட்ட பின்
மனம் துடிக்க கத்த வேண்டும் என்று தோன்ற
வெடிக்க முடியாத சூழ் நிலை அழுத்த
குமைந்த நெஞ்சோடு வீ டு திரும்பி
வெதும்பும் உள்ளத்தோடு சாய்ந்து
நிலையை எண்ணி எண்ணி உருகி
அக்காட்சி திரும்பி திரும்பி தோன்ற
என்னே என்று அறிய முற்படும் உங்களுக்கு
சொல்ல விளையும் நேரம் வந்து விட்டது
ஒரு பெண் தன கணவனை தாக்க
அவன் குடி வெறியை பொறுக்க முடியாமல்
அவனின் அட்டுழியத்தை தாங்கிக் கொள்ள இயலாமல்
அவனை நிலைக்கு கொண்டு வர அடித்தாள் பளாரென்று
அவனின் பொருத்தமற்ற செய்கையை மறைக்க
அவளின் சீற்றத்தை அடாவடி என்று பொருள் பட
ஊதி பெரிதாக்கி அவளை நிலை குலைய வைத்து
தவறின அவனை மன்னிக்க விளையும் சமூகம்
திருத்தின மனைவியை அலங்கோலப்படுத்தும் சமுதாயம்
எங்கே செல்கிறதோ என்று மனது படுத்துகிறது என்னை .