அந்த மரம்
ஊருக்கு அழகாய் உன்னத
மரமாய் உள்ளது...
கினிமணி சைக்கிள் சத்தம்
சிவப்பு ரிப்பன் நீலநிறத்
தாவணி...பொடுசுங்க எல்லோரும்
கடந்து போகும் நிழலிடம்...
நீண்ட கனவு...நிறைந்த
ஆசை...பச்சை பச்சைப்
பொய்கள்...பழுத்த காமக்
கசப்புக் கனிகள்...விரியும்
அரும்புகள்...செய்யும் குறும்புகள்...
விபரீத விளையாட்டு...வினையாகி...
வில்லங்கமாய் உயந்து நிற்க...
கொட்டிச் சிரிக்கிறது மேகம்...
தட்டிக் கொடுக்கிறது மின்னல்...
ஊரே ஒன்னு கூடி
ஒரு முடிவு எடுக்க...
நட்ட நடு சாமத்துல
நட்ட மரம்... கட்டை
வண்டியாய் ஓடுகிறது...
நடு வீதியில்...கட்டி
வைக்க ஒருத்தனும் இல்ல...
கட்டு போட்டவனும் ஓடிபோக...
காத்து வாங்கி நிற்கிறது...
காஞ்சு போன வேலி மரம்...