குற்றவாளிகள்

கவர்ச்சியாளர்களின்
கற்பனையெல்லாம்
பார்வையாளர்களுக்கு நிஜம்
ஆகிப்போவது நல்லதாய்
இருக்கும் என்று எவர்கூற முடியும்?
இலைமறை காயாய்
எங்கோ நடப்பதெல்லாம்
எங்கும் நடப்பதாய்க்காட்டி
கவர்தவர் வாடிக்கை.
கிடைத்தவரை இலாபமென்று
கதையில்லாக் கதை பண்ணி
கற்பனைக்கு எட்டாததையும்
நடப்பதுபோல் காட்டுவதும்
ஆதரவு கொடுப்பவரின்
ஆதரவைப் பெருக்குதற்கும்
அவர்கள் கையாளும் முறை.
அன்று முதல் இன்று வரை
நாளைவரும் கதைகளிலும்
பண்பாட்டைக் கெடுக்கும்வகை
காதலே மூலதனம்:
அந்தரங்க நிகழ்வுகள்,
அரைகுறை ஆடையில்
கதை மாந்தரைக் காட்டுவது
படுக்கையறைக் காட்சிகளை
பளிச்சென்று காட்டுவது.
நல்லது பலகாட்டினாலும்
கெட்டவற்றையே சுற்றி வளைத்துக்
காட்டுவதால் கெட்டியாய் மனதில்
ஒட்டுவது எதுவாய் இருக்கும் என்று
எண்ணிப் பாருங்கள்.
மானிடரின் இயற்கை குணம்
கெட்டதிற்கே எளிதில்
வசப்படும் கேடென்று தெரியாமல்.
ஆதரவு கொடுப்போர் அளவின்றி இருக்க
கவர்ச்சியாளர்களைக் குறைசொல்லும்
நாம்தானெ குற்றவாளிகள்!

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (12-Dec-13, 10:46 pm)
பார்வை : 104

மேலே