சீதனம்

சீதனம்
-----------------
திருமண தேதிக்கு காத்திருக்கும்
கன்னிப்பெண்ணின் நிலை ? ...

இந்திரன் வந்து மீட்பானோ
குடிசையுள்ளே கண்ணீரில்
கரையும் சந்திரனை........

இறக்கை முளைத்த ஆண்கள்
மாடி வீடும்,
தங்கக் கட்டிலும்,
பண மெத்தையும்,
வைரமுத்து சீர்வரிசையும் கேட்டு...
வந்த சம்மந்தங்கள் வாசலோடு போகிறது.....

மிதிலை,கயிலை,தனிகையாக‌
ஏழை இவள் காத்திருப்பு முனைகிறது..

பாட்டியின் பழைய புடவயும்,
முடி போட நூல் தாலியும்,
சேர்த்துவைத்த சல்லிக்காசியும்,
வைத்து கயிற்றுக் கட்டிலில்
கன்னியை கண்ணீர் ரணமாக்க‌
உயிர் நீக்க முனைவதும் ....

விட்டமுமில்லை கயிரு கட்டித்தொங்க....
கிணருமில்லை குதிக்க...
வாழ்வதர்க்கே வளியில்லை
சாவ‌தெப்படி..?
தறைபடியும் கண்ணீர்
கண்ணாடி பார்த்து தன்னைத்தானே
கேள்வி கேட்டு....???

ஆணாகப்பிறந்தவன் அரசனாகிறான்...
பெண்ணாக பிற‌ந்து சீதனமெனும்
விசவாயுகளால் அழிந்து போகிறாள்.....

பெண் எல்லாம் இனி பொன்னாக
பிறக்கனும்....
விலை மாதுவான ஒரு ஈனப்பிறப்பு
வேண்டாம்.....

சீதனம் முற்றுப்பெறாதோ???

-- இர்பான் அஹ்மத் ---

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (12-Dec-13, 11:14 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 739

மேலே