கணவன் மனைவியாய்

கவலை இல்லை
எங்களுக்கு...
கட்டத் தாலி தேவையில்லை
எங்களுக்கு...
கட்டட வீடு தேவையில்லை
எங்களுக்கு...
கல்யாணம் தேவையில்லை
எங்களுக்கு...
கல்யாணத்தால் தாம்பத்தியம் தேவையில்லை
எங்களுக்கு...
கருசுமக்கத் தேவையில்லை
எங்களுக்கு...
கருமாதிச்சோகம் தேவையில்லை
எங்களுக்கு...
கருத்தில்லா சுப்ரீமின் தீர்ப்பு போதும்
எங்களுக்கு...
கவலை இல்லை
எனக்கு...
உறவு இல்லை
எனக்கு...
தாலி கட்ட தேவையில்லை...
வேலி போட யாருமில்லை...
போலி நாடகம் போடத்தேவையில்லை...
பொண்டாட்டி என்றவள் யாருமில்லை...
பிள்ளை என்றவள்(ன்) வளர்க்கத்தேவையில்லை...
இறுதி வரை உறவுகள்
தேவையில்லை...
பிடிக்கும் வரை உன்னுடன்...
பிரிந்தவுடன் அவனுடன்...
இடைக்கால வாழ்வு இஸ்திரியாய்
தேய்த்து...
இம்சையினு விலகி...
இளம்பிஞ்சு தெருவோரம்...
இல்லாததும் எழுத...
அரைப்பங்கு நீயும்...
அரைப்பங்கு நானும்...
அறுத்தறுத்து வளர்க்க...
ஆறெல்லாம் பிணம் மிதக்க...
இன்று மட்டும் சுகம்...
ஈண்ட வாழ்வு வேண்டாம்...
உறவெல்லாம் புதைக்க...
ஊருக்கும் சட்டம் வந்தது...
எனக்கும் கவலை இல்லை...
ஏமாற்றுவது காமம்...
ஐயமிடு எதிர்காலம்...
ஒழுங்காய் இரு...
ஓடி பிடித்து விளையாடு...
ஒளவை பாடல் கற்றுக்கொடு...
விதிகளை விலக்கி...
கதியாய் வாழ்ந்திடு...
கணவன் மனைவி என்று...