விண்ணிலும் மண்ணிலும்

" விண்ணிலும்..!! மண்ணிலும்..!! "
விண்வெளித் தோட்டத்தில்
விளைந்துநிற்குது கோள்கள்
தோட்டத்துக்கு சொந்தக்காரன்
தோற்றம்தான் அறிந்தாருண்டோ?
ஆயிர ஆயிரமாய்
நெச்சத்திர சூரியன்கள்!
சூரியங்களைச் சுற்றும்
பலகோடிக் கோள்கள்!
கோள்களுக்குள் பெருகும்
பல்லுயிர்களின் ஓட்டம்!
ஒவ்வொரு உயிருக்குள்ளும்
ஓராயிரம் ஆசைகள்!
ஆசைகளின் பின்னே
உயிர்களின் ஓட்டம்!
எல்லா உயிருக்குள்ளும்
இன்பமே முதல்தேடல்!
எண்ணங்களே ஆசையாகும்
வாழ்க்கையின் வழித்தடமாகும்
எண்ணங்களின் சேர்க்கையாலே
வாழ்க்கை வண்ணங்களாகும்!
அடிப்படை எண்ணங்கள்
அணைத்தும் சிறக்கட்டும்
ஆனந்தவாழ்வு மலரட்டும்
அற்புதம் நிகழட்டும்!