மரணங்கள் பல விதம்

பள்ளிவகுப்பறையில் இருந்து
என்னையும் எந்தங்கையையும்
யாரோ சொல்லி அழைத்துவந்தார்
நீண்டநாள் நோயில் படுத்திருந்த
எனது சித்தியிறந்தார் இதுதான்
நானறிந்த முதல் மரணச்செய்தி!

ஆசையாய் என்னை வம்புக்கிழுக்கும்
பக்கத்துத்தெரு பாட்டி
மருமகள் கொடுமைகளால்
பூச்சிமருந்து கரைத்துக்குடித்து
தற்கொலை மரணம்!

சாப்பிட்டமர்ந்திருந்த அடுத்தவீட்டு
பச்சையம்மா அவர்களின் திடீர்மரணம் - எனக்கு
முதல் அதிர்ச்சி மரணம்!

பள்ளியில் உடன்படித்து
பத்தாம் வகுப்பில் தோற்றுப்போனதால்
தூக்கிட்டுக்கொண்ட சத்தியாவின்
மனம் பதரவைத்த மரணம்!

காலைநேரம் குளித்துவிட்டுவந்தபோது
கால்இடறி விழுந்து பின்தலையில் அடிபட்டு
உடனேயிறந்த மாமாவின் மரணம்!
அதிர்வுக்குள்ளாக்கிய மரணம்!

அடுத்த வாரம் திருமணம் - இடையில்
யாரோ சாதியைசாட்டி இழிவுபடுதியதால்
இளைஞன் விசம்குடித்து தற்கொலை!
என் ஆருயிர்த்தோழரின் மரணம்
நான் கண்ணீர்விட்டழுத மரணம்!

வயதாகியும் நன்றாக நடமாடிக்கொண்டிருந்து
ஒருநாள் நெஞ்சு படபடக்குதென்றமர்ந்து - இறந்த
தாத்தாவின் இயற்கை மரணம்!

உடல்நிலை சரியில்லாத
எங்கள் பாட்டியை பார்க்கவந்து
நெஞ்சுவலி வந்திறந்த
சின்னம்மாவின் எதிர்பாரா மரணம்!

கட்டிய மனைவியின்
சந்தேகக்கொடுமையினால்
கழுத்தறுத்துக்கொண்டு செத்துப்போன
தெற்குத்தெரு இராசேந்தர் மரணம்!

தரிகெட்டோடிய மணல்வண்டியேறியதால்
தொடைஎலும்பு உடைந்து முதியவர் மரணம்
ஊரேகூடி சாலைமறித்து நின்ற
உயிர்துடித்திறந்த என்தந்தையின் மரணம்!

கைபேசியில் பேசிக்கொண்டே
தண்டவாலம் கடந்ததால்
இரயிலில் அடிபட்டிறந்த
இருபதுவயது இளைஞன் மரணம்!

குடித்துவிட்டு தடுமாறி
வாகனம் ஓட்டிவந்து பெருந்தில்விழுந்து
நசுங்கிசெத்த இளைஞனின் மரணம்!
வீட்டுக்கருகில் நிகழ்ந்த கோரமரணம்!

ஒருநாள் இரயில் பயணத்தின்போது
காதுகேட்காத பெரியவர்
தண்டவாலத்தில் நடந்துவந்து இரயில்மோதி
கால்துண்டாகி விழுந்து மரணம்!

பிறப்புகள் நாளும் நடைமுறை!
இறப்புகள் என்றும் தொடர்கதை!
பிறந்தால் இறப்பு உறுதி!
இறப்பது இயல்பானால் அதுவே உந்தகுதி!

ஒவ்வொரு மரணமும்
ஒவ்வொரு கதைசொல்லும்
மரணங்களின் வாக்குமூலம்!
மரணிக்கவிருப்போர்க்கு - அதுவே
நல்வழி காட்டும் மூலம்!

-----
என் இனிய தோழமைகளே,
இதுவரை, எனது எழுத்து கிறுக்கல்களை படித்து,
கருத்தளித்து, தவறுகளை சுட்டிக்காட்டி, மதிப்பிட்டு,
என்னை உற்சாகப்படுத்திவந்தமைக்கு,
என் மனமார்ந்த நன்றிகள்!
இதோடு, எனது பதிவுகளையும், கருத்திடல்களையும்,
சிலமாதங்களுக்கு நிறுத்துகிறேன்..
எனது வாழ்க்கை பயணத்தில்,
சின்னதொரு குறிக்கோளுக்காக, உங்களைவிட்டு சில மாதங்கள் மனமில்லாமல் பிரிகிறேன்..
மீண்டும், சித்திரை முதல் உங்களோடு இணைவேன்..

-என்றும் அன்புடன்,
எழுத்து சூறாவளி

எழுதியவர் : சீர்காழி.சபாபதி (13-Dec-13, 9:45 am)
பார்வை : 548

மேலே