பணம்

அம்மா குழந்தையின் அழு குரல் கேட்க
கத்தையாய்
கேட்கிறார் பணம் ...

பிறந்ததற்கான சான்றிதழ் வாங்கச்சென்றால்
அங்கேயும் பணம் ...

பள்ளிக்கு சேர்க்கைக்கு அங்கு
பெட்டியில் கேட்கிறான் பணம்...

பள்ளியை முடித்து கல்லூரிக்கு சென்றால்
அங்கு சொத்தையே விற்றாலும்
பத்தவில்லை பணம்....

கல்லூரி முடித்து வேலைக்கு சேர
எப்படி கொடுப்பார் பணம்...

மனம் வெறுத்து
கடவுளிடம் முறையிட கோவிலுக்கு சென்றால்
பணம் கட்டினால்
பக்கத்தில் பார்க்கலாம்
கட்டாதவன் கடைசியில் நில் என்கிறான்

வரிசையில் நின்று
கடவுளை தொழுது
தட்டில் பணம் போட்டவனுக்கு
கையில் திருநீறு
போடாதவனுக்கு
வீசி எறிகிறான் ....

நிம்மதியாய் சாவதிற்கும்
வழியில்லை
சுடுகாட்டிலும் கேட்கிறான் பணம்...

பணம் பணம் பணம்
பணத்தால் பாழ்பட்டு போனதோ
மனிதனின் மனம்....

எழுதியவர் : சத்யாவிக்னேஷ் (13-Dec-13, 8:17 am)
Tanglish : panam
பார்வை : 201

மேலே