வாழ்ந்து கெட்டவர்
புகழ்கொண்டு வாழ்ந்தவர் நெஞ்சம்
புண்பட்ட காரணம் என்னவோ ?
இருந்த போது இரைத்த கரங்கள்
இன்று கரை பட்டதாய்
கட்டியம் கூறுகிறாரே !!
எந்நேரமும் கூடத்தில் கூட்டம்
இன்று கூப்பிட்டும் வரவில்லையே !!
சபை நாயகராய் அமர்ந்திருந்த எம்தந்தை
அமர நாற்காலி காலி இல்லையே !!
மகாலட்சுமியாம் என் அன்னை
இன்றெதிரே வந்தால் ராசியில்லையாம் ...
பெரிதாய் ஒரு நட்பு வட்டம்
இன்று அண்ணனின் தனிமை போக்க ஆளில்லையே ....
செல்வத்திற்கிடைத்த மாண்பு
மனிதர்க்கில்லையோ ?...
இழந்த பொருட்செல்வம் ஈட்டியான்
கொடுத்திடுவேன் ,
மீண்டும் கிடைத்திடுமோ
மறைந்து போன மரியாதை ....