வாழ்க்கை கணக்கு

உறவுகளின் சங்கமம் கூட்டல்
வேதனைகளின் சங்கமம் பெருக்கல்
கோபத்தின் சங்கமம் கழித்தல்
செல்வங்களின் சங்கமம் வகுத்தல்

கூட்ட வேண்டியதை கழிக்கிறோம்
கழிக்க வேண்டியதை கூட்டுகிறோம்
பெருக்குவதையும் வகுப்பதையும்
செய்யும் நேரத்தில் செய்வதில்லை
விட்டு விடுகிறோம்.

நேர்மைதனை கூட்டாமல்
வீண் பேச்சில் நேரத்தைக் க(ளி)ழிக்கிறோம்
வகுத்து வகுத்து செலவுதனை செய்யாமல்
ஆடம்பரத்தை பெருக்குகிறோம்.

கடன் வாங்கி கழிக்கலாம் என்பது
கணக்குப் பாடம்
கடன் வாங்கியே களிப்பது
வாழ்க்கைப் பாடம்

வல்லவன் வகுத்த வழி வாழாமல்
பொய் பொல்லாங்கு கூட்டி
கூடாதோர் நட்பைப் பெருக்கி
நேர்மையான உற்றார் உறவுகளை கழித்து
உண்மை புரியாமல் வாழ்க்கை கணக்கை
தப்பு தப்பாய் போடுகிறோம்

மாறுவோம் மாற்றிக்கொள்வோம்
மாற்றம் காண
நல் மதியும் நற் பண்பும் பெறுவோம்.

எழுதியவர் : arsm1952 (13-Dec-13, 10:10 am)
Tanglish : vaazhkkai kanakku
பார்வை : 829

மேலே