காதலின் அரசியல்

காதலின் அரசியல்

மூன்றெழுத்து பதவி
வாழ்நாள் முழுவதும்-மகிழ்ச்சின்
ஆட்சி......!
தேர்தல் ஆணையம்
அவர்களின்
மனசாட்சி...!
மனுதாக்கல் செய்பவர்கள்
அரசனும் அரசியும்....!
போட்டியிடும் இடங்கள்
இருவரின் உள்ளங்கள்..!

வாக்களிக்கப்படும் உரிமை
வயதுக்கு வந்த
நாள்..!
தலைவர்களின் சின்னங்கள்
விட்டுக்கொடுக்கும்-அன்பும்!
பொறாமைப்படும்-பண்பும்!
கட்சியின் நிறங்கள்
வெண்மையும்!
கருமையும்...!

கட்சியின் பிரச்சாரங்கள்
நம்பிக்கையோடு போராடுவோம்!
காமத்தை மட்டும்
கொண்டாடுவோம்!..
கட்சியின் தொகுதிகள்
இன்பதுன்ப வாழ்க்கை!
இச்சை ஒன்றே வாழ்க்கை..!

வெற்றி பெரும் கட்சி
இவர்களின் உண்மை
காதல்...!
தோல்வி பெரும் கட்சி
இவர்களின்-கள்ளக்
காதல்...!

ஆளும் கட்சியின் செயல்பாடுகள்
குறிக்கோள்-என்ற
சாலை அமைத்தல்..!
நம்பிகை- என்ற
அரசமரம் இடப்புறம்!
துணிவு- என்ற
ஆலமரம் வலப்புறம்!

துன்பம்- என்ற பள்ளம்
உருவாக உருவாக
இன்பம்- என்ற
சீரமைக்கும் குணம்
தொடர்ந்து நடக்கும்...!!!!.

என்றும் காதல்!!!!
என்றென்றும் காப்பியமே!!!!!

எழுதியவர் : ஆல்பர்ட் (13-Dec-13, 10:54 am)
பார்வை : 87

மேலே