மாமியார் கொடுமை

பெண்களே இன்று பெண்களின் எதிரி
பல பல பெண்கள் பெண்களாலேயே
கொடுமை படுத்தப் படுவதும் ஏனோ
வாழ வந்த பெண்ணை நீ வாழ விடு
நீ தாய்க்கு சமம் மருமகளை வாழவிடு

எண்ணம் போல வாழ்கை அமையவில்லையா
வாழ்கை போல எண்ணம் அமைவதில்லையா
நாம் நினைப்பதை மருமகள் செய்ய வேண்டும்
நாம் நினைப்பதை மருமகள் மீது பலி தீர்ப்பதா
வீட்டுக்கு விளக்கேற்ற வந்த பெண் அல்லவா
மருமகளை பெண்ணாக பார்ப்பது உன் கடமை

அவளுக்கு வெளிச்சமில்லாதா வாழ்வு ஏனோ
மாமியார் சொல்வதை எல்லாம் மாடு போல
தலையாட்டி விட்டு தனது புகுந்த வீட்டுக்காக
ஓய்வு இன்றி தேய்கிறாலே நாம் எம் மருமகளை
அடிமை படுத்த நினைப்பதா என்ன வாழ்கை இது
அன்பாய் மருமகளிடம் நடந்து கொள்ளலாமே

இந்த உலகில் நீங்களே அதிர்ஷ்டசாலி மாமியார்
மருமளிடம் அன்பை பொழியுங்கள் ,அணையுங்கள்
எதையும் எதிர் பார்ப்பது மனித இயல்பு தானே
தவறில்லையே அதுவே பெரிய சண்டையாகலாமா
கருத்துக்களை போராடி மருமகள் மீது திணிப்பதா
மகனை பிரித்து விடுவாளோ மாமியாருக்கு மனதில் தீ

பிரச்சனைகளை வளர்ப்பதும் பெண். பிரச்சனைகளை
அணைப்பதும் பெண் .மகன் மேல் உள்ள பாசத்தாலும்
பயத்தாலும் மருமகள் தினம் தினம் தண்டிக்கப்படுகிறாள்
குடும்பங்களை பாதுகாக்க வேண்டியது மாமியாரின்
பொறுப்பு மட்டுமல்ல மருமகளின் பொறுப்புமே
மண முறிவுகளும் சந்தோசம் இன்மையும் ஏன்
உறவுகளை நேசியுங்கள் ,இல்லம் செழிக்க வாழுங்கள்

எழுதியவர் : (13-Dec-13, 3:05 pm)
Tanglish : maamiyaar kodumai
பார்வை : 3500

மேலே