உலாவும் உருவங்கள்

சுற்றும் பூமி சுழன்றிடும் மனிதர்கள்
சுயநலம் கொண்டு அலைந்திடும் பிரியர்கள்
தனது நலனில் முக்கியம் கொள்வார்
பிறரது நலனை அலட்சியம் செய்வார் .......

பேச்சில் மட்டுமே நியாயம் இருக்கும்
செயலில் களவு நிறைந்து கிடக்கும்
எதிரில் உன்னை ஏற்றி பேசி
மறைவில் உன்னை தூற்றி பழிப்பார் .....

அட்டையைபோலே ஒட்டி இருப்பார்
உன்குருதிதன்னை உறிந்துகுடிப்பார்
நீ சக்கையாகி போனபின்னே
உன்பக்கம்வர தயங்கி நிற்ப்பார்........

ருசித்த கரும்பு குப்பையை சேரும்
வாசல்வரை கால் செருப்பை தேடும்
நன்றி என்பது எவர்க்கும் இல்லை
நல்லவருக்கு இது பலநாள் தொல்லை .........

தனது குறைகளை கண்டிட மறுப்பார்
பிறரது குறைகளை சொல்லிட துணிவார்
தான்தான் உலகில் சிறந்தவர் என்று
தம்பட்டம் அடித்து சுற்றி வருவார் ...........

இருப்பதை கொண்டு இன்பம் பெறாமல்
இன்னும் தேடி அலைந்து கலைப்பார்
இருந்ததையும்கூட அனுபவிக்க மறந்து
இறந்தும்கூட பேயாய் அலைவார் .......

பொன்மேல் பெண்மேல் ஆசைகொல்வார்
பொல்லாத காரியம் பலவும் செய்வார்
சுயநலம் ஒன்றை இலக்காய் கொண்டு
பலரது நலனை கொன்று வாழ்வார் .........

போதை கொள்வார் பொறாமை கொள்வார்
பொய்யை கொண்டு உண்மையை மறைப்பார்
பகலில் வேதம்பேசி பட்டை இட்டவர்
இரவில் பட்டையீட்டு வேதம் படிப்பார் .........

பகலும் இரவும் கலந்த பூமியில்
பலரும் பலவிதம் அவரவர் தனிவிதம்
சுழலும் பூமியின் தனித்துவம் போல
உலாவும் உருவங்கள் உலகில் எத்தனை ........

எழுதியவர் : வினாயகமுருகன் (14-Dec-13, 9:53 am)
பார்வை : 63

மேலே