பரிணாமங்கள்
சதுரம் -
சரிநிகர் சமானமாய் சதுரம் போல் சகலரையும் நடத்துவோம்,வாழ்வோம் .
செவ்வகம் -
மகிழ்ச்சி செவ்வகத்தின் நீளமாய், துயரங்கள் செவ்வகத்தின் உயரமாய் யாவர்க்கும் அமையட்டும்.
முக்கோணம் -
மூன்று முக்குகளும் உண்மை பண்பு பாசம் என்பதை நினைவுருத்தட்டும்.
ஆரம் -
ஆரம்பமும்,முடிவும் தெரியாத வாழ்வின் சூட்சமத்தை புரியவைக்கட்டும்
தினமும் பார்க்கும் பரிணாமங்கள்
தெளிவை கொடுக்கும் கருத்தாய் கொண்டு
தவறுகள் திருத்தி பழகிக் கொண்டால்
தப்பேதும் நடக்காது தரணியிலே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
