கல்லூரி வாழ்க்கை
தன் ரகசியத்தை
பரிமாறிக்கொள்ளும்
அழகிய உறவு...
கிண்டல்கள் தொன்று
தொட்டு வாடிக்கையான
சுகமான வேடிக்கை
புரியாத உலகம்
அழகிய
வாழ்க்கை...
தோழமையுடன் இருந்த
காலம் கடந்து
சென்ற நேரம்...
ஏட்டில் எழுதப்படாத
ஓவியம்...
நட்பின் சரித்திரம்
திரும்பவும் கிடைக்காத
தோழமை...
என்றோ ஒருநாள்
திரும்பவும்
சந்திக்க ஏங்கி தவிக்கும்
எண்ணங்கள்...
கண் முன்னே
கனவுகள் போல்
மறைந்தது நேசத்தின்
உறவுகள்...
கோடிகள்
கொடுத்தாலும்
கிடைக்காத ஒற்றை
சுவர் பாட சாலை...
கல்லுரி வாசல் நட்பின்
தொடக்கம்...
அந்த அழகிய
தோழமை கொண்ட
காலம்...
கிடைக்குமா என
தேடமுடன்
பிரிந்து போகும்
நட்புகள்...
தங்களின் கடந்த கால
தோழமையை
நினைத்து
அன்புடன் பேசி
விடை பெற்று
செல்கின்ற
இடம்
கல்லூரி வாசல்....