பாட்டி இல்லை

பாட்டி சொன்னாள்
பல கதைகள்
புரிந்து புரியாமலும்
தலையாட்டினேன் .


பாட்டி சொன்னாள்
பல வைத்தியங்கள்
தெரிந்தும் தெரியாமல்
தலை யாட்டினேன்..

பாட்டி சொன்னாள்
பல வழிமுறைகள்
வேண்டா வெறுப்பாக
தலையாட்டினேன்.


பாட்டி சொன்னாள்
என்று மெதமாக
கவனம் கூடாமல்
தலையாட்டினேன்.

இன்று பாட்டி இல்லை
சொல்வதற்கு யாரும் இல்லை
எனக்காகத் தெரியவில்லை
தலை மட்டும் ஆடுகிறது தன்னாலே.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (14-Dec-13, 11:18 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : paatti illai
பார்வை : 664

மேலே