காதல் எங்கே

இதயம் பார்த்து விழிகள் பேசிய காதல் எங்கே?
விழிகள் பார்த்து கைகள் பேசிய காதல் இங்கே!

காத்திருக்கும் பூவை ரசிக்கும் காதல் எங்கே?
பூவைக் கண்டவுடன் பறிக்கும் காதல் இங்கே!

பார்த்த நினைவை ஓவியமாய் தீட்டிய காதல் எங்கே?
ஓவியத்தை நினைத்து பழகும் காதல் இங்கே!

உறவுகளை மதித்து ஒதுங்கிய காதல் எங்கே?
உறவுகளை உதைத்து ஒதுக்கிய காதல் இங்கே!

மெளனங்கள் பேசிய காதல் எங்கே?
தொலைபேசியில் தொலைந்த காதல் இங்கே!

கடிதங்களில் வாசித்த காதல் எங்கே?
இணையதளத்தில் பொழுதுபோக்கிய காதல் இங்கே!

கதிரவனின் ஒளிக்கதிரில் வினவிய காதல் எங்கே?
மதியவனின் மயக்கத்தில் விழுந்த காதல் இங்கே!

வார்த்தைகளால் வர்ணித்த காதல் எங்கே?
வாரிசு கொடுக்கும் காதல் இங்கே!

காதலை உண்மையாக காதலித்தால்
காதலும் உன்னை காதலிக்கும்.

எழுதியவர் : செ. தினேஷ்குமார் (15-Dec-13, 1:53 am)
சேர்த்தது : kovaidinesh
Tanglish : kaadhal engae
பார்வை : 80

மேலே