கருணாநீதிகள்- நீர் வாழ்க நின் கொடை வாழ்க
எங்கள் நாட்டு
தலைவர்களுக்கு
பெயரில் மட்டும்தான்
கருணை உண்டு!
நீதி க்கு குரல்
கொடுப்பதிலும்,
கொடுத்த நிதிக்கு
தகுந்தவாறு
குரல் கொடுப்பதிலும்
தேர்ந்தவர்கள். . . .
நீதி நூல்களை
யெல்லாம்
விடிய விடிய
படிப்பார்கள். . . . .
எழுதுவார்கள். . . .
நீதி இலக்கியத்தை
தானே எழுதி
தம் பெயரில்
வெளியிடுவார்கள்.....
தாய்மொழி யென்று
தமிழுக்கும்
தொகுதி பிரிப்பார்கள்!
இறுதியாய்
நெஞ்சுக்கு நீதி
வேண்டுமென்று
180000 கோடியை
பஞ்சுக்கு அடியில்
வைத்து
படுத்திருப்பார்கள்.....
இவர்களைத்தான்
நாங்கள்
"கருணாநீதிகள்" என்று
பல வருடங்களாய்
சொல்லிக் கொண்டு
பரதேசியாய்
------திரிகிறோம். . . !!!