விருதுகள்-2013 சீர்மிகு சிறுகதை செம்மல்-2013

தோழமைகளுக்கு வணக்கம்...

கவிதை எழுதுவது என்பது பல்லாங்குழி ஆடுவது போன்றது...எளிது...தொடர் பயிற்சி வெற்றி அளிக்கும்...எனவேதான் பாரதி சொன்னான் "எமக்குத் தொழில் கவிதை "கவிதை எழுதுவது ஒரு தொழில் போன்று சில வரைமுறைக்குள் அடங்கிவிடும்...

கதை எழுதுவதும் கட்டுரை எழுதுவது என்பதும் எழுத்தை விரிவாக்கி சொற்களை விரித்தும் வரிகளை வளைத்தும் வாக்கியங்களில் ஒரு யாகம் நடத்தியும்....இப்படி ஒரு கால்பந்தாட்டம் போன்றது
நிறைய ஓட வேண்டும்....பார்வையாளர்களை களைப்படையாமல் வைத்திருக்க வேண்டும்..நெளிவு சுளிவுகள் வர்ணனை திருப்பு முனைகள் ...என் பன்முகம் காட்ட வேண்டும்..."கதாபாத்திரங்களை சாகடித்தல் என்பது கதை எழுதுபவனின் தற்கொலை" என்பார் காண்டேகர்!!கதை மாந்தர்களும் வாசகனும் சாகக் கூடாது...

இப்படி சில சங்கதிகளுக்கு தன்னை அணியமாக்கி கதை எழுதியவர்கள் நம் மனங்களில் வாழ்கிறார்கள்..தளத்தில் தொடக்க கால சிறுகதைகள் முதற்கொண்டும் வெகுஜசமூகத்தின் அல்லற்பாடுகளை அவலங்களை எழுத்தில் படைத்து நல்ல திருப்பு முனைகளை கதைக்குள் புகுத்தும் திறன் மிக்க ஒரு தோழர் 2013ஆம் ஆண்டும் தளத்தின் சிறுகதைக்கான விருதினை 2014ஆம் ஆண்டின் முதல் விருதென பெறுகிறார்..

அவரை நம் மனத்தால் வாழ்த்துவோம்...கரவொலி எழுப்பி சிறப்பிப்போம்...வாரீர்...

யார் அவர்....?

**************************************************************************

அவர் நமது தோழர் பொள்ளாச்சி அபி....!!

@@@@@@ "சீர்மிகு சிறுகதை செம்மல்-2013" @@
எனும் விருது பெறும்
@@@@@@ தோழர்.பொள்ளாச்சி அபி @@யை வாழ்த்துவோம்....

*******************************************************************

எழுதியவர் : அகன் (15-Dec-13, 11:51 am)
பார்வை : 109

மேலே