நெஞ்சு பொறுக்குதில்லையே
பெற்றவளை
நெஞ்சினினில் சுமக்க முடியாத கயவன் ...
நெருப்பள்ளி போடும் மயானம் வரை மட்டும்
தோள்களில் சுமக்கின்றான்...
மகன் என்ற பெயரோடு....
உயிரூட்டிய அந்த அன்பு தெய்வத்திற்கு ...
நெருப்பூட்ட மட்டும் தான் மகனாய் ..... அவன்
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
இந்த நிலை கெட்ட மகன்களை பார்க்கையிலே...
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
ஆனால் பெற்றவளுக்கோ....?
என் இனிய தோழா ....
பிறக்கபோவதில்லை இனி அந்த
தாயிற்கு மகனாக.... ஆதலால்
நின்றிடுவாய் என்றென்றும் தாயிற்கு அரணாக ...

