மோகங்கள்

வெகுநாட்களாக மீதமிருக்கும் உன் மீதான மோகங்கள் குறைவதேயில்லை இறுக்கமான அணைப்புகளிலும்........
உதடுகள் உரசிடும் மென் நொடிகளும் அழுத்தமான இறுக்கமும் அப்படியே உள்ளது பொத்தி வைக்கப்பட்ட சிறு மலர் ஒன்றின் உருண்டோடும் தேன்துளியாய்..............
எப்போதாகிலும் வெடித்து கிளம்பும் உணர்ச்சிகள் சிதறி ஒவ்வொரு இரவுகளும் இம்சையாய் எரியுதடி....
மோகங்களை உடலில் அதிகம் சுமந்தவன் என் தாபங்கள் உன் கழுத்தோர வாசங்களுக்காய் கிறங்குகிறது...

எழுதியவர் : ரகுநந்தன் வசந்தன் (15-Dec-13, 6:17 pm)
பார்வை : 90

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே