என் நேச தமிழலகி

கண் கொண்டு பார்க்கவில்லை
கை கொண்டு தழுவவும் இல்லை

கட்டியணைத்து ...தொட்டுச் சிரித்து
நினைவுக் கொஞ்சலாடி

அன்பு மழையென்று
ஆயுள் நனைக்கிறதடி..உன் வடிவில்

நம் பிரியக் கூத்தாடல்களில்

விழி குளித்து நீ அழுகிறாய்

உன் மொழி கேட்டு
நான் கண்கலங்குகிறேன்

ஒட்டிப் பிறக்க வந்து
ஒரு கரு பிரிந்து
வேறு உடல் தாங்கியோதடி...உன்னில்

உன்னை எழுதினால் மட்டும்
என்னை ஆசையாக்கி
அலங்காரப் படுத்துவது போல்

துள்ளிக் குதித்து ஓடி வருகிறதடி
எந்தன் மொழிப்பிரியங்கள்.............

உயிரோடு பாசஅலை எழுந்து
கருவறையின் அடிவயிறு
தட்டி நாதமெழுப்பி.......

நானானவள்..

என்று நான் ஆயிரம் முறை
உணர்த்திய போதும்....................

என் உணர்வாடல் அறியாமல்

தாய் முந்தானை சுருட்டி இழுத்து
தன்னுடனே பிடித்து இறுக்கும்

விவரம் புரியாகுழந்தையாய்

அழுது கொண்டே
என்னையும் விழி கலங்க வைத்துகேட்கிறாயடி

இப்படியே...என்னுடன் எப்போதும் இரு .என்று.......

கலங்கும் கண்களில்
இமை தட்டி வழியும் கண்ணீர்.......

சட்டென ஆனந்தமாகிவிட்டதடி
உன் அறியா பிள்ளைத் தனத்தில்......

கண்டு கொள்ளும் நாளில் .......
அழுகையில்லாச் சிரிப்புகள்
நமக்கு சாத்தியமில்லையோடி....

எழுதியவர் : m.palani samy (15-Dec-13, 6:19 pm)
பார்வை : 95

மேலே