நெஞ்சோடு
என் பரந்த மார்போரம் விரியும் உன் அழுத்தங்களின் ஊடாகவே பூவொன்றின் மலரிதல்களை இழுத்து போட்டுக்கொள்கிறேன் நெஞ்சோடு.........
மென் முத்தங்கள் நிறையும் கழுத்தோரம் தொடங்கி உன் பாதங்களில் படரும் கூச்சங்கள் வரை அறிந்துள்ளேன் உன் முணுமுணுப்பின் ஊடாக...........
இதுவரை நானும் அறிந்ததில்லை எனக்குள் ஊறும் ஆண்மையின் ரகசியங்களை.........