என்னுடன் வாழ்ந்துவிடு அன்பே

குயில்களின்
நடனங்களும் ஒடுங்கி விடும்
அவளின் நடை
அழகை கண்டால்....
வண்டுகளின்
ரின்காரங்களும் நின்று விடும்
அவளின் திரு
முகத்தை கண்டால்.....
நிலவை தொட்ட
மேகங்களும் மறைந்துவிடும்
அவளின்
கூந்தலை கண்டால்.....
சுமை தாங்கி
பறவைகளும் தன் சுமையை
மறந்து விடும்
அவளின் புன்னகையை
கண்டால்.....
விரைந்து செல்லும்
பறவைகளும் சிறகை மூடிவிடும்
அவளின்
விழியை கண்டால்.....
வண்ணாத்து புட்சிகளும்
தன் நிறங்களையும் மறந்து விடும்
அவளின்
தேகத்தை கண்டால்....
நீந்தி செல்லு
மீன்களும் கரையில் ஒதுங்கி
விடும் அவளின்
புருவத்தை கண்டால்.....
துள்ளி விளையாடும்
புள்ளி மான்கள் கானகத்தில்
ஒழிந்து கொள்ளும்
அவளின்
இடையை கண்டால்...
சிங்கார சோலையிலே
அன்ன நடை நடப்பவளே
உன் அழகை கண்டு
என்னையே
மறந்து நிற்கின்றேன்!
என் அழகு தேவதையே
என்னை ஒரு
கணம் பார்திவிடு
என்னுடன் வாழ்ந்துவிடு…