புதிர்கள்

தேடல்களால்
வலை பின்னி-சில
தெரிவுகளை
அடுக்கி வைத்து
முடிவிலா ஆவலுடன்
நடுவிலே ஒளிந்திருக்கும்
சிலந்தியாய்
இன்னும் சில
எதிர்பார்ப்புகளுடன்
ஒளிந்திருக்கிறேன்.
காலச்சக்கரத்தின்
சுழற்சியில்
பொய்களும் மெய்களும்
மாறி மாறி வீழ
பிரித்தறிய முடியாத
மாய வலையில்
சிக்கி முடியாது உழலும்
மனம்.
தெளிவான ஒளிகளின்-பின்
அந்தகார இருளும்
சுவையான சொற்களின்-உள்
சுடுகின்ற நெருப்புகளுமாய்
புரியாத தெரியாத புதிர்கள்
பெருகிக் கொண்டே போகின்றன.

எழுதியவர் : மாதுமை (16-Dec-13, 10:28 pm)
Tanglish : puthirkal
பார்வை : 83

மேலே