Mathumai - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Mathumai |
இடம் | : Jaffna |
பிறந்த தேதி | : 09-Jun-1970 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 21 |
மின்சார மட்டையில்
மரித்துப் போகும் நுளம்பின்
குருதி நாற்றத்தில்
மூக்கடைப்பு....!
புன்னகைத்து வரும் எத்தனையோ
முகங்கள்
புலிகளின்
பற்களாய் இன்று
கடித்து குதற நினைக்கிறது !
விலாசமற்று வரும் எத்தனையோ
பெயர்கள்
அனாமேதய
ஐடி எனும் பற்களால்
கவிதைகளை கடித்துக் குதறுவதேன் ?
விருப்பமாய் வரும் எத்தனையோ
தோழர்கள்
சுகமான
கருத்துக்களை
சுபீட்சமாய்
சொல்கையிலே வண்ண வண்ண கனவுகளூருது
கற்பனை சுமந்து வரும் எத்தனையோ
கவிதைகளை
கழிந்து போன
விலங்கு மலமாய்
முகத்திலடித்து
முகமூடி கலையா வேந்தனாவது தகுமா ?
களமமைக்கும் இந்த தளத்தில் எத்தனையோ
அன்பர்கள்
நண்பர்கள்
கவிஞர்கள்
இவர்கள் வாய் குளிர
வாழ்த்து எடுத்தல் தகாமல் போகுமோ ?
பகலவன்
பூமித்தாளில்
வெளிச்சம்
எனும்
வெண்
தூரிகை
எடுத்து
வரைந்த
கறுப்பு
ஓவியம்
கதிரவனின்
கிரணங்களால்
கணிக்கப் படும்
காலத்தின்
பொழுதுக்குள்
கூட்டிற்கும்
ஏரிக்கும் இடையே
அலைந்து
கொண்டிருக்கின்றது
நீர்ப் பறவைகளின்
வாழ்க்கை.
ஓராயிரம் மீன்களின்
கனவுகளோடு.....
கூட்டில் குஞ்சுகள்
பசியுடன் கழுத்து
நீட்டி தாய்ப் பறவையை
தேடிக் காத்திருக்க
வேடன் விரித்த
கண்ணி
வீழும் இரைக்காய்
காத்திருக்கிறது.
பசியின் பரிமாணங்களைத்
தீர்மானிக்கும் தராசின்
படிகள் கடவுளின்
கைகளுக்கு
கணப் பொழுதில்
இடம் மாறுகின்றன.
உயிரைப் பிடித்து தப்பி
உயரப் பறந்து செல்லும்
தாய்ப் பறவையின்
ஒவ்வோர் சிறகின்
துடிப்பிலும்-அதன்
குஞ்சுகளின் குதூகலிப்
நிமிர்ந்து நில்-நீ
குனிந்தால் குட்டுவதற்கு
ஒரு கூட்டம்இருக்கும்!
குறைகள் கண்டுகலங்காதே
நிறைவுகளின் திருப்தியில்
நிறம் மாறாதே.
திறமை வானில் பறந்து போ
உன்னை உயர்த்திய கைகளை
மறந்து விடாதே.
செய் நன்றி மறவாதே-கெட்ட
சேற்றில் கால் வையாதே
உள்ஒன்றும் புறம்ஒன்றும்பேசாதே.
நல் வழியில் நடைபோடு
நாலு பேர்க்காவது
உதவி செய் .
உழைத்துக் களைத்து
உண்பதைப் பகிர்ந்துண்டு
உள்ளத்தில் நிறைவு கொள்
வெற்றியை எளிதாக்கு
வாழ்வை உனதாக்கு-இனி
வானம் உன் வசப்படும்!
காலத்தோடு கைகோர்த்து
கடுகதியாய் மாறும்
மாற்றங்கள்
கற்காலம் முதல்
இக்காலம்வரை வளருது
தொழில் நுட்பம்.
கல் வில் வேல்
அம்பு ஆயுதம் மறைந்து
அணுக்குண்டானது.
கைநாட்டு எழுத்தாணி
தட்டச்சு மருவி
மடிக் கணனியானது.
உலகத்தை நம்
உள்ளங்கையில் தந்தது
விஞ்ஞானம்.
உவகையுடன் நாம்
ஏற்றுக் கொண்டது
தொழில் நுட்ப மாற்றம்.
ஆனால் மாறாமல் நம்முள்
மறைந்தே வாழ்கிறது
இன்னும் பழமை வாதம்
கள்ளமில்லா கற்பனைகள்
வெள்ளமென உள்ளமதில்
தெள்ளு தமிழ் பாக்களெல்லாம்
துள்ளி விழும் நாவினிலே
அள்ளி அதை கவியாக்க -அவள்
பள்ளி சென்று படிக்கவில்லை
எள்ளி நகையாடுபவர்
ஏளனங்கள் தனை மறந்து
கள்ளிமலைக் காட்டோரம்
வெள்ளி விழும் பொழுது வரை
வள்ளியவள் கள்ளி முள்ளெடுத்து
வடிக்கின்றாள் புது இதிகாசம்