புதுப் பா
கள்ளமில்லா கற்பனைகள்
வெள்ளமென உள்ளமதில்
தெள்ளு தமிழ் பாக்களெல்லாம்
துள்ளி விழும் நாவினிலே
அள்ளி அதை கவியாக்க -அவள்
பள்ளி சென்று படிக்கவில்லை
எள்ளி நகையாடுபவர்
ஏளனங்கள் தனை மறந்து
கள்ளிமலைக் காட்டோரம்
வெள்ளி விழும் பொழுது வரை
வள்ளியவள் கள்ளி முள்ளெடுத்து
வடிக்கின்றாள் புது இதிகாசம்