காத்திரு
காத்திரு .......!!!
உன் மௌனத்தை உடைக்க
காத்திருந்ததை விட
ஒரு பெரு மலையை குடைந்து
கோயில் கட்டியிருக்கலாம்
இருந்தும்
நீ கோயிலை போலவே
தரிசனம் தருகிறாய் ......!!!
ஆதலால் தான்
என் தவமும் முத்தி பெற்று
சக்தி உருவாகிறது .....!!!
இழப்பதற்கு எதுவும் இல்லை
என் இதயத்தை தவிர ....என தெரிந்தும்
உன்னிடம் அதையும் இழந்து விட்டு
சிரித்து விளையாடுகிறது
ஒன்றும் அறியாத குழந்தையை போல
நீ எங்கிருந்து வந்தாய் என்று
நான் அறிய விரும்பவில்லை
ஆனால்
எப்படியாவது கண்ணீர் கூட்டணியில் உதறிவிடுவாயோ
என்ற பயத்திலேயே நாட்கள்
இதய கலண்டரை கிழிக்காமல்
முதல் நாள் தொடக்கம் போல்
பொத்தி வைத்து கொண்டிருக்கிறது
எதுவானாலும் .....!!!
உன் அன்பிற்குள் தொலைந்து தொலைந்து
வாழ்க்கை இன்னும் அழகாகிறது
அதற்காகவே காத்திரு ....!!!
மௌனத்தை மொழிபெயர்த்து
மரணம் வரும் முன்
உலக அகராதியை உனக்காக எழுதிவிட்டு செல்கிறேன் .......!!!!