கொல்லுவதற்கான ஒரு சான்று
நிர்வாணமாக பறந்து வரும் காற்றின்
அங்கங்களை உற்றுநோக்கி வீழும்
இலைகளின் நரம்புகளில்
ஓடித் திரிகிறது அந்தரங்கத்தின் ஆன்மா
கனவுகளின் வேர்கள் வியர்க்கும்
ராத்திரிகளில்
கன்னங்கள் முழுதும் முத்தங்களை
ஒட்டிச் செல்கிறது
விரகத்தின் கிளைகள்
தாகத்தில் வீணீர் வடிக்கும் தெருநாயொன்றாய்
ஆழக்கிணற்றின் படியிலிருந்தே
தவளைகளோடு தனிமையைப் புணர்கிறேன்
பிரபஞ்சத்தின் பிரமைகளில் கப்பலோட்டியபடி
நிகழ்காலத்துக் கவிஞனாய்
கரைகளற்ற அண்டத்திற்கு
பகலிலேயே செல்லுகிறேன்
இப்போது கொல்லுங்கள்
உயிரற்ற என்னையும்
அறமற்ற என் எழுதுகோலையும்.