கடவுளின் கணக்கு

கதிரவனின்
கிரணங்களால்
கணிக்கப் படும்
காலத்தின்
பொழுதுக்குள்
கூட்டிற்கும்
ஏரிக்கும் இடையே
அலைந்து
கொண்டிருக்கின்றது
நீர்ப் பறவைகளின்
வாழ்க்கை.
ஓராயிரம் மீன்களின்
கனவுகளோடு.....

கூட்டில் குஞ்சுகள்
பசியுடன் கழுத்து
நீட்டி தாய்ப் பறவையை
தேடிக் காத்திருக்க
வேடன் விரித்த
கண்ணி
வீழும் இரைக்காய்
காத்திருக்கிறது.

பசியின் பரிமாணங்களைத்
தீர்மானிக்கும் தராசின்
படிகள் கடவுளின்
கைகளுக்கு
கணப் பொழுதில்
இடம் மாறுகின்றன.

உயிரைப் பிடித்து தப்பி
உயரப் பறந்து செல்லும்
தாய்ப் பறவையின்
ஒவ்வோர் சிறகின்
துடிப்பிலும்-அதன்
குஞ்சுகளின் குதூகலிப்பு
கேட்கிறது!

எழுதியவர் : maathumai (8-Jan-14, 3:22 am)
Tanglish : kadavulin kanakku
பார்வை : 98

மேலே