இந்தக் காலத்து பெண்கள்

இவள்
அழகான ஆடை
உடுத்தி இருந்தாலும்...
எப்பொழுதும்
அழுத்தமான
மனநிலையில் தான் வாழ்கிறாள் ....

பெண்ணுக்குச்
சமஉரிமை என்று
இந்தச் சமுதாயம்
சத்தமாக சொல்லிக்கொண்டு
இருந்தாலும் ...

மனச் சுத்தமாக
யோசித்தால்..
எதில்
என்பது கேள்விகுறி ..?

இதோ..!
அவளின் சமஉரிமைகள் ...

கஷ்டத்தில் சமஉரிமை ...
வேதனையில் சமஉரிமை ...
பிரச்சினையில் சமஉரிமை..
கடன் கட்டுவதில் கூட சமஉரிமை...

இப்பொழுதெல்லாம்
பெண்கள்
நாணத்தோடு நடப்பதில்லை
என்கிறார்கள் நல்லறிவு
படைத்தவர்கள் ....

ஆம் ..!

நாணயம் சம்பாதிக்க
அனுப்பும் நல்ல குடும்பங்களே ...

உடல் உழைப்பில்
நலிந்து போன பெண்ணிடம்
நாணம் எப்படி
எதிர்ப் பார்க்கமுடியும்...

பெண்ணை
அச்சத்தோடு
இரு என்று சொல்லும்
நல்ல மனிதர்களே ...

அச்சத்தோடு இருந்தால்
இந்த சில
கெட்ட ஆண்களின்
மத்தியில் மானம்
காப்பது கடினம்
என்பதை மறந்துவிடாதீர்கள் ...

அந்தக் கால
பெண்கள் எல்லாம்
சமையல் கலை புரிவது ,
பிள்ளைப் பேணி வளர்பது
குடும்பம் உயரச் செய்வார்கள் ,
மரியாதை செய்வார்கள் என்று
அடுக்கி கொண்டுப் போகும்
அன்பு உள்ளங்களே ...!

ஒத்துக்கொள்கிறேன்
உங்கள் அனைத்தையும்...!

ஆனால் ,

உங்களிடம்
ஒரு கேள்வி ..?

உங்கள்
அம்மா வேலைக்கு
செல்லவில்லை...

உங்கள்
மனைவியும் வேலைக்கு
செல்லவில்லை...

ஏன்..?
உங்கள்
தங்கையும்/மகளையும் மட்டும்
வேலைக்கு அனுப்புகிறார்கள்...

காரணம் கேட்டால் ,

என்
தங்கையும்/மகளும்
படித்தவர்கள் ,
புத்திசாலிகள் என்று
பல நூறு
காரணங்கள்
சொல்லுவீர்கள்...

யதர்த்தமாகப்
பார்த்தால் உண்மை
அது இல்லை ...

உங்களின்
குடும்பக் கஷ்டம் போக்க
என்ற பெயரில்
உங்களுக்கு கொஞ்சம்
ஆனந்தம் அனுபவிக்க ...

பெண்ணை
அறிவுள்ளவள் என்று
சொல்லிச் சொல்லிச் அடிமை
செய்துவிட்டீர்கள்...

இந்த சமுதாயமும் ,

பெண்ணுக்கு
சமஉரிமை தருகிறோம் என்று
சொல்லிக் கொண்டு
உயிரை உறிஞ்சுக் கொண்டு இருக்கிறார்கள் ...

அதே நேரம்..

இதே..!
சமுதாயம் தான்
இந்தக் கால
பெண்களிடம்
அடக்கமும் ,
மரியாதையும் இல்லை என்று சொல்லி ...
அவமானமும்
செய்கிறது...

இந்தக் கால
பெண்ணுக்கு
உங்கள் சமஉரிமையை...

மனத்தளவில் கொடுங்கள்
பணத்தளவில் கொடுக்க வேண்டாம் ....!

எழுதியவர் : தமிழ் மகன் (17-Dec-13, 12:09 pm)
பார்வை : 624

மேலே