என் முதல் செய்யுள்
![](https://eluthu.com/images/loading.gif)
சிறு வயதில் செய்யுள்
எழுத நினைத்து
எதை எதையோ
கிறுக்கியதுண்டு ...
அவைகளில் ஒன்று ...
பறந்து செல்வதால்
பறவை என்றோம்
மலைக்க வைப்பதால்
மலை என்றோம்
நாக்கு தொங்குவதால்
நாய் என்றோம்.
அடுத்த ஒன்று ...
மாந்தன் ஆடினால் நடனம்
பூமியே ஆடினால் மரணம்.
அடுத்த ஒன்று ...
வாய்ப்புகள் உன்னைத்தேடி வாராது
நாம்தான் அதைத் தேட வேண்டும்.
கிட்டிய வாய்ப்பை தவற விட்டால்
திரும்ப கிடைப்பது எழுது அல்ல.
இது போதுமா?
இன்னும் நிறைய
இருக்கு!!!
வாசிக்க வாசிக்க
சிரிப்பு வருகிறதோ.
இப்படித்தான்
தொடங்கியது
என்
எழுத்துச் செலவு. (செலவு = பயணம்)
இப்போதும் அப்படித்தான்
பெரிய எழுத்தாளன் அல்லதான்.
அப்ப அப்ப
என் உணர்வுகளின்
வெளிப்பாடு
எழுத்துக்களாகும் போது
அவை
எனக்கு மட்டும்
பெரிய படைப்பாக
தோன்றும்.
அது மட்டும்
போதும் என்றும்
தோன்றும்.
- சு. சுடலைமணி