திருமணம் இன்று துர்மணம்
இரு மனம் இணையும் போது
மிகுந்த மணம் உண்டாகும் நேரம்
கலந்து உறவாட எண்ணும் வேளை
கூடி மகிழும் காலம்
நடை பெரும் நிகழ்வு
திருமணம் என்ற ஒரு காட்சி
திரு என்று அ டை மொழி
அருளைக் குறிக்க
மணம் என்ற சொல்
வாசம் என்பதை எடுத்துரைக்க
வாசம் நல்ல வாசனையை தெளிக்க
வாசம் ஒரு இருப்பிடம் என்று கொள்ள
அருள் நிறைந்த இருப்பிடம்
திருமணம் என்று கொண்டு
சிறப்புடனும் சீருடனும்
காதலுடனும் இணைந்து
வாழ பணிப்பதே
திருமணம் ஆகி வந்தது
இன்று அது உடைபட்டு
சட்டை மாறும் நேரம் கூட தாங்காமல்
விட்டு விலகி முறிந்து
தூளாகி பொடியாகும் போது
அது துர்மணம் என்று கொள்ள நேரிட
வகையான வாழ்வு தொய் ந்து
துவண்டு நசிந்து போகும் நிலை
மனத்தை பாதித்து வலியை .
செவ்வனே உண்டாக்குகிறது