அழகு மலரின் ஆசை

என்
வீட்டுப் பூச்செடிகளுக்கு...
தன் செடியில்
இருப்பதை விட...
உதிர்வது தான்
மிகவும் பிடிக்கும்
என்று சொல்கிறது...
ஏன் தெரியுமா..?
அப்போது தான்...
என்
அன்பு மகனின்
மெல்லிய பாதம்
அவர்களின் மீது படுமாம் ...
என
ஆசையோடு
என்னிடம்
அடிக்கடி சொல்கிறது...
அந்த
அழகு மலர் செடிகள்…