காதல் தண்டனை

தண்டனை
==========

அவள் உறங்க வேண்டும் ; நான் உரைக்கவேண்டும்
...
என்னை யார் கேட்பார்?

வெளியே ,

நிலவு, காற்று, கிணறு, அவளிருந்த கதிரை இன்னும் உலர்த்திய ஆடைகள் .

உள்ளே ,

சுவர்கள், மின்விசிறி,உறக்கத்து குழந்தை, கடிதம் எழுதும் பேனா இன்னும் அவள் அழகு செய்யும் கண்ணாடி .

தினமும் என்னை அவள் வெல்வாள். இன்று அவளை நான் வென்றேன்.

அவள் உறங்குகின்றாள் .நான் உரைக்கின்றேன்.

உரை ;

என்னை எவ்வாறு நான் தேடுவேன்.

பலவருடங்களுக்கு முன்னர் நான் தொலைந்தேன் .சின்னதாய் இன்னும் ஒரு சந்தேகம் நான் தொலையவில்லை என்னை யாரோ திருடியிருக்கவேண்டும் .

ஒருநாள் கடலோரமாய் நடந்து சென்றபோது நுரைக்குள் ஒளிந்து கொண்டேன்

ஒரு நாள் கடலோர காற்றில் கரைந்தேன்.

வீதியோரபொடினடையின் போது தளிர்த்து வரும் மரங்களுக்கு பச்சையானேன் இன்னொருநாள்.

முதன்முதலாய் பூத்த ரோஜாவுக்கு வாசமானேன் மற்றொருநாள்.

சந்தேகம் தெளிவு .

பல இடங்களில் நான் தொலைந்து போனேன்; இன்று சிறைவாசம்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (18-Dec-13, 3:11 pm)
Tanglish : kaadhal thandanai
பார்வை : 80

மேலே