​தமிழ் தமிழ் தமிழ்

​தமிழ் ...தமிழ்... தமிழ்
அன்னைத்தமிழ் அன்புத் தமிழ்
அருமைத் தமிழ் அலங்காரத் தமிழ் !
சங்கம் வளர்த்தத் நம் தமிழ்
சரித்திரம் போற்றும் நம் தமிழ் !

தமிழ்...தமிழ்...தமிழ்
வரலாறு பலபடைத்த தமிழ்
வானளவு புகழுடைய தமிழ் !
பாரே போற்றிடும் பைந்தமிழ்
பாவலர்கள் பாடிய பழந்தமிழ் !

தமிழ் ...தமிழ் ...தமிழ்
இமயத்தை விஞ்சிய தமிழ்
இதயத்தில் வாழும் தமிழ் !
அய்யன் வள்ளுவன் தமிழ்
அழியா வரம்பெற்றத் தமிழ் !

தமிழ் ...தமிழ் ... தமிழ்
எழுத்தால் இணைத்திடும் தமிழ்
எழுத்து தளத்தின் அழகுத் தமிழ் !
நம்மின் சுவாசம் தமிழ்
நம்மின் உயிரேத் தமிழ் !

தமிழ் ...தமிழ் ...தமிழ்
தென்றலின் சுகம் தரும் தமிழ்
தெம்மாங்கு பாடிடும் தமிழ் !
செருக்கிலா செம்மொழி தமிழ்
செழுமையாய் தழைத்த தமிழ் !

தமிழ் ...தமிழ் ...தமிழ்
மல்லிகை மணமுள்ள தமிழ்
மண்ணின் மகரந்தம் தமிழ் !
இலக்கிய இலக்கணத் தமிழ்
இன்னிசை இயல் தமிழ் !

தமிழ் ...தமிழ் ...தமிழ்
அரியணை ஏற்றிடும் தமிழ்
அகிலமே போற்றிடும் தமிழ் !
புவியெங்கும் பரவிட்ட தமிழ்
புதுமைகள் படைத்த தமிழ் !

தமிழ் ...தமிழ் ...தமிழ்
முக்கனி சுவையாய் தமிழ்
மும்மாரி பொழியும் தமிழ் !
அறிவியல் உலகிலும் தமிழ்
அறிஞர்களை உருவாக்கிய தமிழ் !

தமிழ் ...தமிழ் ...தமிழ்
கணிப்பொறியிலும் கன்னித் தமிழ் !
கண்டங்கள் ஏழிலும் பொங்குத் தமிழ் !
வீரமிகு எழுச்சித் தமிழ்
விவேகம் நிறைந்த தமிழ் !

தமிழ் ...தமிழ் ...தமிழ்
எங்கும் எழுச்சித் தமிழ்
எதிலும் ஏற்றமிகு தமிழ் !
உணர்வூட்டும் காவியத் தமிழ்
உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் !

தமிழ் ...தமிழ் ...தமிழ்
என்னை உங்களுடன் இணைத்தத் தமிழ்
என்றும் காப்போம் நம் தமிழை
என்றும் இணைவோம் நம் தமிழால் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (18-Dec-13, 3:09 pm)
பார்வை : 370

மேலே