காதலுடன் ஓர் பாமாலை
என் கணவனாக வரப்போகும்
தோழனிற்கு என் பிறந்தநாள் வாழ்த்துமடல்.... (15.12.2013)
என்னவனே !
இது கவிதை அல்ல - நீ தினமும்
எனக்கு தரும் அன்பு புக்களினால்
பாச நுாலிலே காதலுடன் நான் தொடுத்த
பா மாலை........
என் வாழ்க்கை புத்தகத்தின்
அத்தியாயத்திற்கு காதல் முகவுரை
எழுதியவனே .......
உந்தன் வாழ்க்கை என்றுமே
பிரகாசித்திட வேண்டும்.........
நுாறு ஆண்டுக்கு ஒரு முறை
மலர்வது குறிஞ்சி மலர் - ஆனால்
தினந்தோறும் என் வாழ்க்கையில்
மலர்வது உந்தன் பாசமலர்கள்.......
என்றென்றுமே உன் வாழ்க்கையில்
புன்னகை மலர்கள் மலர்ந்திட வேண்டும்.......
கெஞ்சலுடன் கொஞ்சலுமாய்
சின்ன சின்ன செல்ல சண்டைகளுடன்
காதலின் இனிமையை புரிய வைத்தவனே
உந்தன் வாழ்க்கை என்றுமே
இனிமையாக அமைந்திட வேண்டும்.........
மறுஜென்மம் நீயும் நானும்
மீண்டும் பிறந்திட வேண்டும்
காதலர்களாய்.......
உந்தன் வாழ்க்கையில்
சந்தோச தென்றல் வீசிட
புன்னகை மலர்கள் மலர்ந்திட
வசந்தங்கள் பெருகிட
காதல் மழை பொழிந்திட
என்னவனே நீ வாழ வேண்டும்
இவ்வுலகில் வையகம் போற்றிட.......
வானவில்லை நுாலாக வளைத்து
நட்சத்திரங்களை மலர்களாக தொடுத்து
மேக கூட்டங்கள் புடை சூழ
நீ தரும் அன்பு முத்தங்களை
கவிவரிகளாக்கி அனுப்புகிறேன்
என் வாழ்த்து மடலை..........