நிலவும் நீயும்

வான் நிலவாக அவள்
என் நிலவாக நீ

மேகங்களுக்கிடையே அவள் வளர்கிறாள்
தேகங்களுகிடையே நீ வளர்கிறாய்

பூக்களை போல அவள் புன்னகை சிந்துகிறாள்
புன்னகையை போல நீ பூக்களை சிந்துகிறாய்

காதலர்க்காக அவள் வருகிறாள்
என் காதலுக்காக நீ வருகிறாய்

இரவில் தான் அவள் அழகு
முப்பொழுதும் நீ தான் அழகு

இரவில் அழகு சேர்ப்பது அவளின் ரகசியம்
கனவில் அழகு சேர்ப்பது உந்தன் ரகசியம்

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (19-Dec-13, 11:37 am)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : nilavum neeyum
பார்வை : 157

மேலே